துணை வேந்தர்களின் நியமனங்களுக்கான UGC வழிகாட்டுதல்கள்
January 9 , 2025 130 days 191 0
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆனது, மாநிலங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் மிகவும் பரந்த அதிகாரங்களை ஆளுநர்களுக்கு வழங்கும் வகையில், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் பொதுத் துறை சார்ந்த நபர்கள் ஆகியோர் இந்தப் பதவியில் நியமிக்கப் படுவதற்கான வாய்ப்பினையும் வழங்கும் வகையிலான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தப் பதவிக்குக் கல்வியாளர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் ஒரு மரபு ஆனது உடைக்கப்படுகிறது.
இந்தப் புதிய விதிமுறைகள் ஆனது துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல் முறையில் வேந்தர்களுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்கும்.
வேந்தர்/பார்வையாளர் மூன்று நிபுணர்களைக் கொண்ட ஒரு தேடல் மற்றும் தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும்.
ஒப்பந்த ஆசிரியர் நியமனங்களுக்கான இதில் உச்ச வரம்பும் நீக்கப் பட்டது.
2018 ஆம் ஆண்டு விதிமுறைகள் அத்தகைய நியமனங்களை ஒரு கல்வி நிறுவனத்தின் மொத்த ஆசிரியர் பதவிகளில் 10 சதவீதமாக கட்டுப்படுத்தியிருந்தன.
இந்தப் புதிய வரைவு விதிமுறைகளானது, இளங்கலை அல்லது முதுகலை நிலைகளில் விண்ணப்பதாராரின் கல்வித் துறையானது, PhD (முனைவர்) துறையிலிருந்து வேறு பட்டால், அவர்கள் PhD பெற்ற துறையில் ஆசிரியராக நியமிக்க தகுதியுடையவராகக் கருதப்படுவர் என்றும் கூறுகிறது.
மேலும், இளங்கலை அல்லது முதுகலை நிலைகளில் அவ்விண்ணப்பதாரரின் துறை ஆனது, NET அல்லது SET போன்ற தகுதித் தேர்வுகளில் அவர்களின் துறைகளிலிருந்து வேறுபட்டதாக இருந்தால், விண்ணப்பதாரர் அந்தத் தேர்வுகளில் தாம் தகுதி பெற்ற பாடத்தில் ஆசிரியராக நியமனம் பெறத் தகுதியுடையவர் ஆவர்.