துபாய் இணைய நகரத்துடன் நான்காம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
October 24 , 2018 2539 days 924 0
தேசிய மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்கள் கூட்டிணைவானது (NASSCOM - National Association of Software and Services Companies) மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய வர்த்தகங்களை விரிவுபடுத்துவதற்காக துபாய் இணைய நகரத்துடன் (Dubai Internet City) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க (MENA – Middle East and North Africa) பிராந்தியத்தில் ஏற்பட்ட முதலாவது ஒப்பந்தமாகும்.
இது இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs/ small and medium-sized enterprises) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.