2026-ஆம் ஆண்டில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் துறைமுகப் பாதுகாப்புப் பணியகத்தை (BoPS) இந்திய அரசு நிறுவியுள்ளது.
இந்தியாவில் உள்ள கப்பல்கள், துறைமுகங்கள் மற்றும் அவை தொடர்பான உள் கட்டமைப்புகளின் பாதுகாப்பை மேற்பார்வையிடுவதற்காக BoPS உருவாக்கப் பட்டு உள்ளது.
இது சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தின் (BCAS) மாதிரியில் உருவாக்கப் பட்டு உள்ளது.
இது கடல்சார் பாதுகாப்பு மற்றும் இணையவழிப் பாதுகாப்புக்கான உச்ச அதிகார அமைப்பாகச் செயல்படும்.
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையானது (CISF) துறைமுகங்களுக்கான அங்கீகரிக்கப் பட்ட பாதுகாப்பு அமைப்பாக (RSO) நியமிக்கப்பட்டுள்ளது.
BoPS ஆனது துறைமுகப் பாதுகாப்பு, கப்பல் பாதுகாப்பு, உளவுத் தகவல்களைப் பகிர்தல் மற்றும் இணைய அச்சுறுத்தல் தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
இந்தியாவின் கடல்சார் துறையில் கண்காணிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.