TNPSC Thervupettagam

துறைமுகப் பாதுகாப்புப் பணியகம்

July 6 , 2026 2 days 72 0
  • 2026-ஆம் ஆண்டில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் துறைமுகப் பாதுகாப்புப் பணியகத்தை (BoPS) இந்திய அரசு நிறுவியுள்ளது.
  • இந்தியாவில் உள்ள கப்பல்கள், துறைமுகங்கள் மற்றும் அவை தொடர்பான உள் கட்டமைப்புகளின் பாதுகாப்பை மேற்பார்வையிடுவதற்காக BoPS உருவாக்கப் பட்டு உள்ளது.
  • இது சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தின் (BCAS) மாதிரியில் உருவாக்கப் பட்டு உள்ளது.
  • இது கடல்சார் பாதுகாப்பு மற்றும் இணையவழிப் பாதுகாப்புக்கான உச்ச அதிகார அமைப்பாகச் செயல்படும்.
  • மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையானது (CISF) துறைமுகங்களுக்கான அங்கீகரிக்கப் பட்ட பாதுகாப்பு அமைப்பாக (RSO) நியமிக்கப்பட்டுள்ளது.
  • BoPS ஆனது துறைமுகப் பாதுகாப்பு, கப்பல் பாதுகாப்பு, உளவுத் தகவல்களைப் பகிர்தல் மற்றும் இணைய அச்சுறுத்தல் தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
  • இந்தியாவின் கடல்சார் துறையில் கண்காணிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்