ஜம்மு-காஷ்மீர் அரசு, ஜம்மு பகுதிக்கு ராவி நதி நீரைத் திருப்பிவிடுவதையும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் (1960) இடைநிறுத்தப் பட்ட பிறகு துல்புல் நீர்வழி தடுப்பணைத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதையும் பரிசீலித்து வருகிறது.
ராவி நதி திசை திருப்பும் திட்டம் பஞ்சாபிலிருந்து ஜம்மு பகுதிக்கு தண்ணீரை மாற்றுவதை முன்மொழிகிறது.
வுல்லார் தடுப்பணை என்றும் அழைக்கப்படும் துல்புல் நீர்வழி தடுப்பணை திட்டம், ஜம்மு-காஷ்மீரில் உள்ள வுல்லார் ஏரியின் நீர் வெளியேற்றப் பகுதியில் அமைந்து உள்ளது.
1984 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சிந்து நீர் ஒப்பந்தத்தின் (1960) கீழ் ஆட்சேபனைகள் காரணமாக நிறுத்தப்பட்டது.
இது குளிர்கால மாதங்களில் ஜீலம் நதியில் நீர் ஓட்டத்தை ஒழுங்குபடுத்த வடிவமைக்கப் பட்டது.
இந்தத் திட்டம் நீர்வழிப் பயணத்தை மேம்படுத்துவதையும் கீழ்நிலை நீர்மின் உற்பத்தியை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.