ஈரானுடன் தொடர்புடைய மேற்கு ஆசிய மோதல்களின் போது அமெரிக்க இராணுவத்தால் PrSM (துல்லியமாகத் தாக்கும் எறிகணை) எறிகணை பயன்படுத்தப் பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
PrSM என்பது நீண்ட தூரம் பாயும், நிலப்பரப்பிலிருந்து நிலப்பரப்பில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் எறிகணையாகும்.
இது அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் ATACMS (இராணுவத்திற்கான திட்டமிடப்பட்ட எறிகணை அமைப்பு) அமைப்பிற்கு மாற்றாக வடிவமைக்கப் பட்டு உள்ளது.
இந்த எறிகணை சுமார் 60 கி.மீ முதல் 499 கி.மீ-க்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டது.
இதனை MLRS (பல்முனை ஏவுகணை ஏவுதள அமைப்பு) மற்றும் HIMARS (அதிவேக இயங்குதிறன் கொண்ட பீரங்கி ஏவுகணை அமைப்பு) ஆகிய ஏவுதளங்களில் இருந்து ஏவ முடியும்.
இது எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கட்டளை மையங்கள் மற்றும் தளவாட முகாம்களைத் தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.