AASM (Armement Air-Sol Modulaire) என்றும் அழைக்கப்படுகின்ற HAMMER (Highly Agile Modular Munition Extended Range) ஆனது ஒரு துல்லிய வழிகாட்டுதலுடன் கூடிய வானில் இருந்து தரையில் உள்ள இலக்கினைத் தாக்கி அழிக்கும் ஆயுதமாகும்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) மற்றும் சஃப்ரான் இடையேயான 50:50 வீதத்திலான ஒரு கூட்டு முயற்சியின் மூலம் இந்தியாவில் HAMMER ஆயுதங்களை தயாரிப்பதற்காக பிரான்சின் சஃப்ரான் நிறுவனத்துடன் இந்தியா ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
HAMMER ஆனது வழிகாட்டுதல் மற்றும் உந்துவிசை கருவிகளைப் பயன்படுத்தி வழக்கமான குண்டுகளை துல்லியத் தாக்குதல் ஆயுதங்களாக மாற்றுகிறது.
இது INS-GPS (நிலைமம் சார் வழிசெலுத்தல் அமைப்பு–புவியிடங்காட்டி அமைப்பு), அகச் சிவப்பு மற்றும் லேசர் வழிகாட்டுதல் போன்ற வழிகாட்டுதல் தேர்வுகளை கொண்டு உள்ளது.
HAMMER ஆயுதத்தினைப் பாதுகாப்பான வரம்புகளிலிருந்து பயன்படுத்தலாம் என்ற நிலையில் இதனை ரஃபேலுடன் ஒருங்கிணைக்கப்பட்டு தேஜாஸ் விமானங்களில் இணைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.