தூதர்களை திரும்ப அழைக்கும் பிரான்சு – AUKUS பாதுகாப்பு ஒப்பந்தம்
September 23 , 2021 1416 days 585 0
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைப்பதற்காக அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடையே மேற் கொள்ளப் பட்ட முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் காரணமாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து பிரான்சு தனது தூதர்களைத் திரும்ப அழைத்துள்ளது.
AUKUS இராணுவ ஒப்பந்தமானது இந்திய பசிபிக் பகுதியில் நிலவும் இராணுவ அபாயங்களை எதிர்கொள்வதற்காகவும் ஆஸ்திரேலிய நாட்டிற்கு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டதாகும்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதரவோடு ஆஸ்திரேலிய நாட்டிலேயே கட்டமைக்கப்படும்.