தூத்துக்குடி உப்பு, ஆத்தூர் பூவன் வாழைப்பழம் மற்றும் வில்லிசேரி எலுமிச்சை ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி உப்பு ஆனது சூரிய ஒளியில் ஆவியாதல் முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப் படுகிறது என்பதோடுதூத்துக்குடி உப்பு இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில் சுமார் 30% பங்களிக்கிறது.
தாமிரபரணி கால்வாய் பாசனப் பகுதியில் ஆத்தூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் பூவன் வாழை பயிரிடப்படுகிறது.
கோவில்பட்டியைச் சேர்ந்த வில்லிசேரி எலுமிச்சை அதன் வலுவான நறுமணம், அதிக சாறு உள்ளடக்கம், குறைவான விதைகள் மற்றும் நீண்ட நாட்கள் வீணாகாமல் இருத்தலுக்குப் பெயர் பெற்றது.