February 9 , 2026
3 days
40
- 2035-ஆம் ஆண்டுக்குள் ஆந்திரப் பிரதேசத்தை ஒரு தூய்மையான எரிசக்தி மையமாக மாற்றுவதற்கான வரைவுத் திட்டத்தை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
- இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் சேமிப்பு, மின்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மலிவு விலையில் மின்சாரம் வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
- இந்தச் செயல் திட்டமானது, நிதி ஆயோக்கின் முன்முயற்சியான ASSET (நீடித்த மாநில ஆற்றல் மாற்றத்தை விரைவுபடுத்துதல்) திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இந்தச் செயல் திட்டம் மார்ச் 2026-க்குள் இறுதி செய்யப்படும் என்றும், அதன் அமலாக்கம் 2026-ல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Post Views:
40