இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்று ஒரு மாத அளவிலான தூய்மை இந்தியா இயக்கத்தினை பிரயாக்ராஜ் எனுமிடத்தில் தொடங்கி வைத்தார்.
இந்தத் தேசிய அளவிலான இயக்கமானது ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்கள் மற்றும் இதரக் கழிவுகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா முழுவதும் 744 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு 6 கிராமங்களில் இந்த இயக்கம் நடத்தப் பட்டு வருகிறது.
இந்த இயக்கமானது நேரு யுவ கேந்த்ரா சங்கதன் திட்டத்துடன் தொடர்புடைய இளையோர் குழுக்கள் மற்றும் தேசிய சேவைத் திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஆகியவை மூலம் நடத்தப் படுகிறது.