35 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள நகர்ப்புறப் பகுதிகள் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற (Open Defecation Free - ODF) பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகரப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சிறப்பம்சங்கள்
59 லட்சம் வீட்டுக் கழிப்பறைகள் என்ற இலக்கைக் காட்டிலும் 65.81 லட்சம் வீட்டுக் கழிப்பறைகள் அமைக்கப் பட்டதன் மூலம் இந்த இலக்கு அடையப் பட்டுள்ளதாக நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலக்கை அடைவதற்காக இந்த அமைச்சகமானது ODF+ மற்றும் ODF++ ஆகிய நெறிமுறைகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
நகர்ப்புறங்களுக்கான தூய்மை இந்தியா திட்டமானது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகின்றது.
கிராமப் புறங்களுக்கான தூய்மை இந்தியா திட்டமானது மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகின்றது.
இந்தியாவில் உள்ள கிராமப் புறங்கள் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளன.