TNPSC Thervupettagam

தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள்

August 17 , 2025 2 days 54 0
  • தமிழக அமைச்சரவையானது, ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று தூய்மை பணியாளர்களுக்கான 6 நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
  • சென்னை மாநகராட்சிக் கழகம் (GCC) தொடங்கி அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் இலவச காலை உணவு வழங்கப்படும்.
  • பணியின் போது ஏற்படும் விபத்து காரணமான மரணத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையானது 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப் படும்.
  • 3.50 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 35% மானியமும், தொழில்முனைவோருக்கு 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.
  • தொழில்முனைவோர் திட்டத்திற்கு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  • நகர்ப்புறங்களில் வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளில் 30,000 வீடுகள் கட்டப் படும்.
  • பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவியுடன் விடுதி மற்றும் புத்தகக் கட்டணங்களுக்கான நிதி ஆதரவும் கிடைக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்