TNPSC Thervupettagam

தூர்தர்ஷன் அலைவரிசை - 60 ஆண்டுகள் நிறைவு

September 17 , 2019 2120 days 766 0
  • தூர்தர்ஷன் அலைவரிசைச் சேவையானது 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
  • தூர்தர்ஷன் ஆனது இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி பொதுச் சேவை ஒளிபரப்பாகும். இது இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்குச் சொந்தமானதாகும்.
  • இது 1959 ஆம் ஆண்டில் தில்லியில் நிறுவப்பட்டது. பின்னர் இது மும்பை மற்றும் பிற நகரங்களிலும் ஏற்படுத்தப்பட்டது.
  • 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று இது அகில இந்திய வானொலியில் இருந்து பிரிக்கப்பட்டு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு புதிய துறையாக உருவெடுத்தது.
  • இதன் தலைமையகம் தில்லியில் உள்ளது. இதன் குறிக்கோள் “சத்யம் சிவம் சுந்தரம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்