அமெரிக்காவின் அலாஸ்காவில் அமைந்துள்ள தெனாலி மலையை அடைந்த முதலாவது இந்தியக் குடிமைப் பணி அதிகாரி இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் துணைப் பொது ஆய்வாளர் (DIG - Deputy Inspector General) அபர்ணா குமார் ஆவார்.
இது வட அமெரிக்காவில் உள்ள உயரமான மலை உச்சியாகும்.
உள்ளூர் மொழியில் தெனாலி என்பது “மிகச் சிறந்த ஒன்று” என்பதைக் குறிக்கும்.
தென் துருவப் பயணத்தை நிறைவு செய்த முதலாவது பெண் இந்தியக் காவல் பணி துணைப் பொது ஆய்வாளர் மற்றும் ITBP அதிகாரி அபர்ணா குமார் ஆவார்.