TNPSC Thervupettagam

தென்கிழக்கு ஆசிய நீலப் பொருளாதார நெருக்கடி

August 1 , 2026 18 days 85 0
  • நிதிப் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாகத் தென்கிழக்கு ஆசியாவின் நீலப் பொருளாதாரம் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) வெளியிட்ட அறிக்கை எச்சரித்துள்ளது.
  • இப்பகுதியின் பெருங்கடல் சார்ந்த பொருளாதாரம் மீன்பிடித் தொழில், நீர்வாழ் உயிரின வளர்ப்பு, கப்பல் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் வாழ்வாதாரங்களை ஆதரிக்கிறது.
  • அதிகப்படியான மீன்பிடித்தல், வாழ்விட அழிவு, மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை சதுப்பு நிலங்கள், பவளப்பாறைகள் மற்றும் கடற்புல் படுகைகள் போன்ற கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளை சேதப்படுத்துகின்றன.
  • நிலையான பெருங்கடல் மேலாண்மை மற்றும் பருவநிலை தழுவலுக்காக 2030 ஆம் ஆண்டிற்குள் தென்கிழக்கு ஆசியா கிட்டத்தட்ட 2.1 டிரில்லியன் டாலர் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
  • நீலப் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக நீல நிறப் பத்திரங்கள், நீல/கடல்சார் கார்பன் சந்தைகள், இயற்கைக்கான கடன் பரிமாற்றங்கள் மற்றும் நிலைத்தன்மை சார்ந்த கடன்கள் உள்ளிட்ட கலப்பு நிதியுதவியை விரிவுபடுத்த OECD பரிந்துரைத்து உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்