TNPSC Thervupettagam

தென்னிந்தியாவின் அலிகார்

August 20 , 2023 633 days 620 0
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி 'தென்னிந்தியாவின் அலிகார்' என்று அழைக்கப்படுகிறது.
  • உருது மொழிக்கும், 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இங்கு செழித்துப் பல்கிப் பெருகி வரும் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் உள்ள ஈடுபாடே இதற்குக் காரணம் ஆகும்.
  • தேசிய உருது மொழி மேம்பாட்டுச் சபையானது (NCPUL) 25வது அகில இந்திய உருது புத்தகக் கண்காட்சியை வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில் நடத்தி உள்ளது.
  • இங்கு வாழும் உருது மொழி பேசும் முஸ்லீம்கள் இரண்டு வரலாற்றுக் கால கட்டங்களைச் சேர்ந்தவர்களாக கண்டறியப் பட்டுள்ளது.
  • முதலாவதாக, குறிப்பாக 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டாவில் இருந்து தக்காண சுல்தானியர்கள், அரேபிய மொழியின் எழுத்து வடிவில் எழுதப் பட்ட ‘தக்னி’ எனப்படும் அந்தப் பிராந்தியத்தில் பேசப்பட்ட உருதுவின் ஆரம்பக் கால வடிவத்தினைப் பிரபலப் படுத்திய ஒரு காலக் கட்டமாகும்.
  • இரண்டாவதாக, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தஞ்சாவூர், மதுரை மற்றும் இன்றையத் தமிழ்நாட்டின் பிற இடங்களில் இருந்து வாணியம்பாடியை வந்தடைந்தத் தமிழ் மொழி பேசும் புலம்பெயர்ந்தோர் பிரிவின் (தமிழ் தக்னி) துணைப் பிரிவினர் வாழ்ந்த ஒரு காலக் கட்டமாகும்.
  • ஆற்காடுப் பிரதேசத்தைச் சேர்ந்த பின்வரும் தமிழ் முஸ்லிம்கள் உருது இலக்கியத்தில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
    • காக்கா அப்துல் அஜீஸ் ஃபஹீம் (1898-1943),
    • லப்பை கதீப் முகமது அசம் ‘மக்பூல்’ (1898-1958) மற்றும்
    • பாங்கி அப்துல் காதர் டானிஷ் ஃபராசி (1922-1981).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்