இந்தியாவின் 2வது மற்றும் தென் இந்தியாவின் முதலாவது கிசான் இரயிலானது அனந்தப்பூர் மற்றும் புது தில்லி ஆகியவற்றிற்கிடையேத் தொடங்கி வைக்கப் பட்டது.
இந்த இரயிலானது வேளாண் விளைபொருட்களை ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தப்பூரிலிருந்து புது தில்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் இரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்கின்றது.
முதலாவது கிசான் இரயில் சேவையானது ஆகஸ்ட் 07 அன்று மகாராஷ்டிராவில் உள்ள தேவ்வாலி மற்றும் பீகாரில் உள்ள தனப்பூர் ஆகியவற்றிற்கிடையே ஒரு வாராந்திர சேவையாகத் தொடங்கப்பட்டது. பின்னர் இது வாரத்திற்கு இருமுறை மேற்கொள்ளப்படும் சேவையாக மாற்றப்பட்டது.