TNPSC Thervupettagam

தென் கொரியாவிற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பயணம்

September 8 , 2019 2112 days 576 0
  • இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசு முறைப் பயணமாக தென் கொரியாவிற்குச் சென்றுள்ளார்.
  • இராணுவத் தளவாட ஒப்பந்தம் ஒன்று அங்கு கையெழுத்திடப்பட்டது.
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள தென் கொரியத் துறைமுகங்களில் இது செயல்படும் போது இந்தியாவிற்குத் தளவாட உதவியை அளித்திட இந்த ஒப்பந்தம் உறுதியளிக்கின்றது.
  • “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் முக்கியமான ஆயுத அமைப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்களைத் தயாரிப்பதற்காக தென் கொரியாவைச் சேர்ந்த தொழிற்சாலைகள் இந்தியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளன.
  • தென் கொரியாவின் “புதிய தெற்குக் கொள்கை” மற்றும் இந்தியாவின் “கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை” ஆகியவை இரு நாடுகளுக்கிடையே ஒரு சிறப்பு வாய்ந்த உத்தி சார்ந்த பங்குரிமையை ஏற்படுத்துவதற்கு உதவும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்