'Frontline Democracy: Media and Political Churn' என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது ஆசியப் பத்திரிகைச் சுதந்திரக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பூடான் மற்றும் மாலத்தீவுகளில் நிலவும் பத்திரிகைச் சுதந்திரத்தின் நிலையை இந்த அறிக்கை மதிப்பாய்வு செய்கிறது.
இந்தக் காலக்கட்டத்தில் 250க்கும் மேற்பட்ட ஊடக உரிமை மீறல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன; 69 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்/தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர் என்பதோடு 20 பேர் பணியின் போது கொல்லப் பட்டனர்.
பாகிஸ்தான் கடந்த 20 ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் மீது அதிகளவில் வன்முறை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஆண்டை எதிர்கொண்டது.