உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐ.நா குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) தரவுகளின் படி, தெற்காசியா 2024 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான அதிகபட்சத் தடுப்பூசி வழங்கீட்டினை எட்டியது.
இந்தியாவில் எந்த தடுப்பூசியும் பெறாத குழந்தைகளின் எண்ணிக்கையில் 43% சரிவுப் பதிவானது என்பதோடு 2023 ஆம் ஆண்டில் 1.6 மில்லியனாக இருந்த இது 2024 ஆம் ஆண்டில் 0.9 மில்லியனாகக் குறைந்தது.
சுமார் 23,000 என்ற எண்ணிக்கையிலிருந்து இது 11,000 ஆகக் குறைந்துள்ளதுடன் எந்த தடுப்பூசியும் பெறாத குழந்தைகளின் எண்ணிக்கையில் நேபாளம் 52% இலக்கினை எட்டியுள்ளது.
தொண்டை அழற்சி நோய், தசை இழுப்பு வாதம் மற்றும் கக்குவான் இருமல் (DTP3) தடுப்பூசியின் மூன்றாவது தவணைக்கு பாகிஸ்தானில் இது வரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 87% என்ற அதிகபட்ச தடுப்பூசி வழங்கீடு பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தடுப்பூசிப் பரவலானது 1 சதவீதப் புள்ளி குறைந்து, இப்பகுதியில் மிகக் குறைவான அளவிலானதாக பதிவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டில், தெற்காசியாவில் சுமார் 92% குழந்தைகள் மூன்றாவது தவணை DTP தடுப்பூசியைப் பெற்றனர் என்பதோடு இது 2023 ஆம் ஆண்டை விட 2 புள்ளிகள் அதிகமாகும் என்ற நிலையில் இதில் முதல் தவணை வழங்கீட்டின் பரவலானது 93 சதவீதத்திலிருந்து 95% ஆக உயர்ந்தது.
இந்தப் பகுதியில் எந்த தடுப்பூசியும் பெறாத குழந்தைகள் 2.5 மில்லியனிலிருந்து 1.8 மில்லியனாகக் குறைந்து 27% ஆக உள்ளது.
இளம் பருவப் பெண்களுக்கான மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி வழங்கீட்டுப் பரவல் 2023 ஆம் ஆண்டில் இருந்த 2 சதவீதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 9% ஆக அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் HPV தடுப்பூசி வழங்கலைத் தொடங்கியதிலிருந்து வங்காள தேசத்தில் 7.1 மில்லியனுக்கும் அதிகமான சிறுமிகளுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.
நேபாளத்தில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதன் தேசிய HPV தடுப்பூசி வழங்கல் பிரச்சாரத்தைத் தொடங்கியது, இதன் மூலம் 1.4 மில்லியனுக்கும் அதிகமான சிறுமிகளுக்கு தடுப்பூசி போட்டது.
இந்தியாவும், பாகிஸ்தானும் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் HPV தடுப்பூசி வழங்கல் திட்டங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.
முன்னேற்றங்கள் இருந்த போதிலும், தெற்காசியாவில் 2.9 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் தடுப்பூசி போடப்படாமல் அல்லது பரிந்துரைக்கப்பட்ட அனைத்துத் தடுப்பூசிகளையும் பெறாமல் உள்ளனர்.