தெற்காசியாவின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் மன்றம்
August 19 , 2021 1551 days 647 0
2021 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் மன்றத்தினுடைய 11வது வருடாந்திரச் சந்திப்பானது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரும், இம்மன்றத்தினுடையத் தலைவருமான சுசீல் சந்திரா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இவரோடு தேர்தல் ஆணையர்கள் ராஜீவ்குமார் மற்றும் A.C. பாண்டே ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
இந்தக் காணொலி வாயிலான சந்திப்பானது பூடானின் தேர்தல் ஆணையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
தங்க முத்துக்களைக் கொண்ட இம்மன்றத்தின் சின்னமானது ஜனநாயகம், வெளிப்படைத் தன்மை, பாரபட்சமின்மை மற்றும் ஒத்துழைப்பின் நித்திய மதிப்புகளைக் குறிக்கிறது.
இந்தச் சந்திப்பானது ‘தேர்தல்களில் தொழில்நுட்பப் பயன்பாடு’ (Use of Technology in Elections) எனும் கருப்பொருளின் கீழ் நடத்தப் பட்டது.