TNPSC Thervupettagam

தெற்காசிய வளர்ச்சியில் இந்தியா முதன்மை

April 10 , 2026 2 days 59 0
  • தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சியை இந்தியா முன்னின்று நடத்தும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
  • இந்தியாவின் பொருளாதாரமானது 2025 ஆம் நிதியாண்டில் (FY25) 7.1% லிருந்து 2026 ஆம் நிதியாண்டில் (FY26) 7.6% ஆக உயர்ந்து, வலுவான செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளது.
  • 2027 ஆம் நிதியாண்டில் வளர்ச்சி 6.6% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் இப்பிராந்தியத்தில் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது.
  • வலுவான தனியார் நுகர்வு மற்றும் ஏற்றுமதி ஆகியவை பொருளாதார வளர்ச்சி மற்றும் தேவையை ஆதரிக்கின்றன.
  • GST சீர்திருத்தங்கள் மற்றும் குறைந்த பணவீக்கம் ஆகியவை மக்களின் செலவிடும் திறனை அதிகரித்துள்ளன.
  • கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்கள் விநியோகம் மற்றும் பணவீக்கத்தைப் பாதிக்கக் கூடிய அபாயங்களாகக் கருதப் படுகின்றன.
  • உலகளாவிய நிச்சயமற்றத் தன்மைகளால் 2026ம் ஆண்டில் தெற்காசியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி 6.3% ஆகக் குறையக் கூடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்