தெற்கு சூடான் நாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புத் திட்டத்தின் படைத் தளபதி
July 11 , 2022 1136 days 496 0
இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் மோகன் சுப்ரமணியன் தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புத் திட்டத்தின் படைத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புத் திட்டத்திற்கான படையில் கிட்டத்தட்ட 20,000 அமைதி காக்கும் படையினர் பணியாற்றுகின்றனர்.
அவர்கள் மோதலால் பாதிக்கப்பட்ட நாட்டில் வாழும் குடிமக்களைப் பாதுகாக்கச் செய்வதற்காகவும், நீடித்த அமைதியை உருவாக்குவதற்காகவும் பணி புரிகின்றனர்.
இந்தியாவிலிருந்து மொத்தம் 1,160 அமைதி காக்கும் வீரர்கள் தற்போது தெற்கு சூடானில் பணியாற்றி வருகின்றனர்.