தெற்கு-தெற்கு ஒத்துழைப்பிற்கான சர்வதேச தினம் 2026 - செப்டம்பர் 11
September 15 , 2026 37 days 126 0
வளரும் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவிப்பதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் இத்தினக் கொண்டாட்டம், தெற்கு-தெற்கு ஒத்துழைப்பிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தால் (UNOSSC) கூட்டப்பட்ட, ஐ.நா சபை வசதி செய்த தன்னார்வக் கூட்டமைப்பான 'தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பிற்கான உலகளாவிய கூட்டமைப்பின்' தொடக்கத்தைக் குறித்தது.
தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு என்பது வளரும் நாடுகள் தங்கள் அறிவு, தொழில்நுட்பம், திறன்கள், வளங்கள் மற்றும் வெற்றிகரமான வளர்ச்சித் தீர்வுகளைப் பரிமாறிக்கொள்ள உதவுகிறது.
முக்கோண ஒத்துழைப்பு என்பது கூடுதல் தொழில்நுட்ப, நிதி அல்லது நிறுவன ஆதரவை வழங்குவதற்காக வளரும் நாடுகளை வளர்ந்த நாடுகள் அல்லது சர்வதேச அமைப்புகளுடன் ஒன்று சேர்க்கிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Solidarity Rising: Global Alliance for Inclusive and Innovative Development” என்பதாகும்.