தெற்கு – தெற்கு ஒத்துழைப்பிற்கான ஐநா சர்வதேச நாள் – செப்டம்பர் – 12
September 12 , 2017 2904 days 1049 0
தெற்கு – தெற்கு ஒத்துழைப்பு என்பது தென்கோளத்தில் உள்ள நாடுகள் மற்றும் மக்களிடையே தங்கள் தேசிய நலன், தங்கள் தேசிய மற்றும் சுயசார்பை அடைவதற்கான ஒத்துழைப்பின் வெளியிடாகும்.
இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வளர்ச்சி இலக்குகள் மற்றும் 2030 வருடத்திற்கான நீடித்த மேம்பாட்டிற்கான இலக்கை அடைவதையும் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.
தெற்கு – தெற்கு ஒத்துழைப்பு என்ற வார்த்தைப் பதமானது வளங்கள், தொழில்நுட்பம் மற்றும் அறிவு மூலங்களை வளரும் நாடுகளிடையே பகிர்ந்து கொள்கை வடிவமைப்பாளர்களாலும் உபயோகப்படுத்தப்படுகிறது.
இந்த ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், உலக தெற்கு – தெற்கு ஒத்துழைப்பு கண்காட்சி 2017 துருக்கியக் குடியரசால் நவம்பர் 27 முதல் 30 வரை அன்பில்யா என்ற இடத்தில் நடத்தப்பட இருக்கிறது.