தெற்கு நாடுகள் மற்றும் மும்மைய ஒத்துழைப்பு (SSTC) ஆனது ஆண்டுதோறும் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப் படுகிறது.
வளர்ந்து வரும் நாடுகளிடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக மேற் கொள்ளப்பட்ட 1978 ஆம் ஆண்டு பியூனஸ் அயர்ஸ் செயல் திட்டத்தின் கீழ் SSTC நிறுவப்பட்டது.
இந்திய-ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுக் கூட்டாண்மை நிதியம் மற்றும் இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டம் மூலம் SSTC கட்டமைப்பில் இந்தியா பங்கேற்கிறது.
47க்கும் மேற்பட்ட அரசாங்கங்கள் SSTC திட்டங்களுக்குப் பங்களித்துள்ளன என்ற நிலையில் இதனால் 155 நாடுகளில் உள்ள மக்கள் பயனடைகிறார்கள்.
SSTC கட்டமைப்பின் கீழ் உள்ள 56 வளர்ந்து வரும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள 75 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா நிதியளித்துள்ளது.