தெலுங்கானா பயிர்க் கடன் தள்ளுபடி திட்டம் 2024
July 24 , 2024
304 days
343
- தெலுங்கானா அரசானது வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தின் முதல் கட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
- 11 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் கணக்கில் 6,098 கோடி ரூபாய் வரவு வைக்கப் பட்டு, 1 லட்சம் ரூபாய் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
- இது இந்தியாவின் மிகப்பெரிய கடன் வசூலைக் குறிக்கிறது.
- கடன் தள்ளுபடி திட்டம் ஆனது மேலும் இரண்டு கட்டங்களில் நிறைவு செய்யப்படும்.
- மொத்தம் 31,000 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் கடன் தள்ளுபடி மூலம் தெலுங்கானாவில் உள்ள 50 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.
- ஆகஸ்ட் மாதத்தில், 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாநில அரசு நிதி வழங்கும்.

Post Views:
343