TNPSC Thervupettagam

தெலுங்கானா AI அடிப்படையிலான அவசர கால உதவி அமைப்பு

June 27 , 2026 13 hrs 0 min 12 0
  • தெலுங்கானா மாநிலம் தனது அவசர கால உதவி மற்றும் இணையவழிக் குற்ற மேலாண்மை உள்கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளைப் பயன்படுத்தியுள்ளது.
  • தேவையற்ற மின்னஞ்சல் மற்றும் தேவையற்ற அழைப்புகளைத் தடை செய்ய 112 அவசர கால உதவி அமைப்பு மற்றும் 'டயல் 100' காவல் உதவி எண்களில் தெலுங்கானா AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  • 1930 இணைய வழிக் குற்ற உதவி எண் ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளை ஆதரிக்கும் AI குரல் வழி உதவியாளரைப் பயன்படுத்துகிறது.
  • இந்த AI அமைப்பு அழைப்புகளை ஒழுங்கமைக்கப்பட்ட அறிக்கைகளாக மாற்றுகிறது மற்றும் மோசடி தொடர்பான நிதியை விரைவாக முடக்க உதவுகிறது.
  • தெலுங்கானா இணையவழிப் பாதுகாப்பு பணியகம், இணையவழிக் குற்றங்கள் மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை விசாரணைகளுக்காக C-SIGHT AI தளத்தைத் தொடங்கியுள்ளது.
  • தெலுங்கானா தரவுப் பரிமாற்றம் (TGDeX) என்பது AI பயன்பாடுகளுக்கான இந்தியாவின் முதலாவது மாநில அளவிலான 'டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பாக' திட்டமிடப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்