TNPSC Thervupettagam

தெஹ்ரானில் முத்தரப்பு கூட்டம்

September 19 , 2025 15 hrs 0 min 21 0
  • இந்தியா, ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 09 ஆம் தேதியன்று ஈரானின் தெஹ்ரானில் முதல் முத்தரப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தின.
  • தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
  • இதில் சபாஹர் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்குப் போக்குவரத்து வழித் தடம் (INSTC) ஆகியவற்றை அதிக அளவில் பயன்படுத்துவதன் வர்த்தகம் மற்றும் இணைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
  • கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவை இந்தியாவுடன் வர்த்தகத்தினை அதிகரிக்கவும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை அணுகுவதற்கும் சபாஹர் துறைமுகத்தைப் பயன்படுத்துவதில் ஆர்வம் தெரிவித்தன.
  • சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும், அருமண் தாதுக்கள் உட்பட முக்கிய பொருட்களைப் பெறுவதற்கும் யூரேசியப் பொருளாதார ஒன்றியத்துடன் இந்தியா ஓர் ஆரம்ப தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) பின்பற்றுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்