TNPSC Thervupettagam

தேக்கு மரத்தோட்டத் திட்டம்

September 15 , 2026 13 hrs 0 min 18 0
  • மர உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாயிகளின் நீண்டகால வருமானத்தை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு ஐந்து உயர் விளைச்சல் தரும் தேக்கு ரகங்களை (Clones) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • தேக்கு (டேக்டோனா கிராண்டிஸ்) என்பது லாமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய இலையுதிர் மரமாகும்; இது வலுவான, நீடித்த மற்றும் கரையான்களை எதிர்க்கும் மரக்கட்டைகளுக்காகப் புகழ்பெற்றது.
  • பசுமைத் தமிழ்நாடு திட்டம் (GTM), கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மர மேம்பாட்டு நிறுவனத்துடன் (IFGTB) இணைந்து, IFGTB-TG-1 முதல் IFGTB-TG-5 வரையிலான ரகங்களை ஊக்குவித்து வருகிறது.
  • வேகமான வளர்ச்சி, சிறந்த சுற்றளவு, நேரான உருளை வடிவ தண்டுகள் மற்றும் உயர்தர மர உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ரகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
  • தேக்கு சாகுபடிக்கு உகந்த 20 மாவட்டங்களில் உள்ள செய்முறை விளக்கப் நிலங்களில் சுமார் 55,000 தேக்கு கன்றுகள் நடப்படும்.
  • பூச்சிகள், நோய்கள் மற்றும் பருவநிலை அழுத்தத்தினால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கப் பல இரக அணுகுமுறை (Polyclonal approach) பயன்படுத்தப்படும்; அதே வேளையில் திசு வளர்ப்பு மையங்கள் உயர்தர நடவுப் பொருட்களை தயாரிக்க ஆதரவளிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்