தேசத் துரோகச் சட்டம் 124A பிரிவு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
May 13 , 2022 1151 days 546 0
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124A வது பிரிவின் (தேசத் துரோகம்) கீழ் நிலுவையில் உள்ள குற்றவியல் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் சுமார் 13,000 பேர் ஏற்கனவே சிறையில் இருப்பதாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இந்தியாவில் சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவ மதிப்பைக் கொண்டு வந்தாலோ, அல்லது தூண்டிவிட்டாலோ அல்லது வெறுப்பைத் தூண்ட முயற்சித்தாலோ, ஒரு நபர் தேசத் துரோகக் குற்றத்தைச் செய்கிறார் என்று 124Aவது பிரிவு கூறுகிறது.
இது வார்த்தைகள் மூலமாகவோ, பேசப்பட்டதாகவோ அல்லது எழுதப்பட்டதாகவோ அல்லது குறியீடுகள் மூலமாகவோ அல்லது கண்ணுக்குப் புலப்படும் விதமான அடையாளங்கள் மூலமாகவோ என எதன் மூலமாக வெளியிடப் பட்டிருந்தாலும் அதற்கு இந்த விதிமுறை பொருந்தும்.
இப்பிரிவு இதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கிறது.
1862 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்தியத் தண்டனைச் சட்டத்தில் தேசத் துரோகம் தொடர்பான விதிமுறை எதுவும் இல்லை.
இது 1870 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டு, சுதந்திரப் போராட்ட இயக்கத்தை அடக்கும் நோக்கில் 1898 ஆம் ஆண்டில் அதன் வரம்பு விரிவாக்கப்பட்டது.