தேசியக் கடல்சார் பாரம்பரியங்களுக்கான வளாக மேம்பாடு
October 15 , 2024 316 days 287 0
குஜராத்தில் உள்ள லோத்தல் நகரில் தேசியக் கடல்சார் பாரம்பரியங்கள் வளாகத்தினை (NMHC) உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்தத் திட்டத்தின் 1B மற்றும் 2 ஆம் கட்டங்களுக்கு அமைச்சரவை கொள்கை சார் ஒப்புதலையும் வழங்கியுள்ளது.
NMHC அருங்காட்சியகத்தின் 1A கட்டமானது ஆறு காட்சியகங்களைக் கொண்டு இருக்கும் என்பதோடு இதில் இந்தியாவின் மிகப்பெரியதாக அமைய உள்ள இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் காட்சியகமும் இடம் பெற்றிருக்கும்.
NMHC அருங்காட்சியகத்தின் 1B கட்டம் ஆனது மேலும் எட்டு காட்சியகங்களையும் உலகின் மிகவும் உயரமானதாக அமையக் கூடிய வகையிலான கலங்கரை விளக்க அருங்காட்சியகத்தினையும் கொண்டிருக்கும்.