குஜராத்தின் லோத்தல் என்னுமிடத்தில் தேசியக் கடல்சார் பாரம்பரிய வளாகத்தை நிறுவுவதற்கு வேண்டிய ஒத்துழைப்பிற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகமும் கலாச்சாரத் துறை அமைச்சகமும் கையெழுத்திட்டுள்ளன.
தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகமானது (National Maritime Heritage Complex – NMHC) ஒரு சர்வதேச சுற்றுலாத் தலமாக உருவாக்கப்பட உள்ளது.
இங்கு பண்டைய காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான இந்தியாவின் கடல்சார் பாரம்பரியங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
இதன் தனித்துவம் மிக்க அம்சமானது பண்டைய கால லோத்தல் நகரை (பண்டைய சிந்து நாகரீக நகரம்) மறு உருப்பெறச் செய்து காட்சிப்படுத்துவதே ஆகும்.