இந்தியத் தேர்தல் ஆணையம் தேசிய மக்கள் கட்சியை ஒரு தேசியக் கட்சியாக அறிவித்து இருக்கின்றது.
இது அக்கட்சியை வடகிழக்குப் பிராந்தியத்திலிருந்து தேசியக் கட்சி என்ற தகுதியைப் பெறும் முதல் அரசியல் கட்சியாக மாற்றியுள்ளது. இதன் தேர்தல் சின்னம் புத்தகமாகும்.
இக்கட்சி 2013 ஆம் ஆண்டில் பிஏ சங்மாவால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமையகம் மணிப்பூரின் இம்பாலில் அமைந்திருக்கின்றது.
இந்த கட்சி அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகாலந்து ஆகிய மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
2015 ஆம் ஆண்டில் இக்கட்சி தேர்தல் ஆணையத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட முதலாவது கட்சியாக உருவெடுத்தது. ஏனெனில் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது அக்கட்சி தனது கட்சியின் தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்காத காரணத்தால் தேர்தல் ஆணையம் இந்நடவடிக்கையை மேற்கொண்டது.
அரசியல் கட்சிகளின் பதிவு, 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29A என்ற விதிகளின் கீழ் நெறிமுறைப் படுத்தப்படுகின்றது.
தேசியக் கட்சியாக அங்கீகாரமளிக்கப்பட வேண்டிய தகுதிகளாவன