TNPSC Thervupettagam

தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020

August 1 , 2020 1737 days 4157 0
  • மத்திய அமைச்சரவையானது உயர் கல்வித் துறையைச் சீரமைப்பதற்காக வேண்டி 2020 ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பின்னணி

  • 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் முன்னாள் அமைச்சரவைச் செயலாளரான TSR சுப்பிரமணியன் என்பவரின் தலைமையின் கீழ் புதிய கல்விக் கொள்கையின் (NEP - New Education Policy) மேம்படுத்து வளர்ச்சிக்கான குழுவானது தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

  • 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் வரைவு தேசிய கல்விக் கொள்கைக்கான குழுவானது இஸ்ரோவின் முன்னாள் தலைவரான கஸ்தூரிரங்கன் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது.

  • கடைசியாக கல்வி கொள்கையானது 34 ஆண்டுகளுக்கு முன்பாக 1986 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டிருந்தது.

  • முதலாவது NEP ஆனது 1968 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி தலைமையிலான அரசால் பிரகடனப் படுத்தப்பட்டது. இரண்டாவது NEP ஆனது 1986 ஆம் ஆண்டில் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசால் பிரகடனப் படுத்தப்பட்டது. மூன்றாவது NEP ஆனது பிரதமர் நரேந்திர மோடியால் பிரகடனப் படுத்தப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்கள்

  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது மத்திய அமைச்சரவையினால் மத்தியக் கல்வித்துறை அமைச்சகமாக பெயர் மாற்றப் பட்டு உள்ளது.

  • மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசினால் மேற்கொள்ளப்படும் கல்விக்கான பொதுச் செலவினமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இது இதற்கு முன்பு 1.7% ஆக இருந்தது.

பள்ளிக் கல்வி

  • இது தற்பொழுதுள்ள 10+2 பாடத் திட்ட முறையை மாற்றி 3-18 வயதுடைய குழந்தைகளை உள்ளடக்கக் கூடிய வகையில் 5+3+3+4 என்ற வழிகாட்டு அமைப்பை ஏற்படுத்த பரிந்துரைத்துள்ளது.

  • 5 ஆண்டு கால அடிப்படை நிலை : 3 ஆண்டு கால பாலர் வகுப்புப் பள்ளி மற்றும் படித்தரம் (கிரேடுகள்) 1, 2;

  • 3 ஆண்டு கால ஆயத்தப் பள்ளி நிலை: (ஆரம்ப நிலைக்குப் பிந்தைய) படித்தரங்கள் 3, 4, 5;

  • 3 ஆண்டு கால நடுநிலை: (ஆரம்பநிலைக்கு மேல் நிலை) படித்தரங்கள் 6, 7, 8;

  • 4 ஆண்டு கால உயர் நிலை: (உயர்நிலை) படித்தரங்கள் 9, 10, 11, 12;

  • 2025 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்குமான பாலர் வகுப்புக் கல்வியை (3-6 ஆண்டுகள்) உறுதி செய்தல்.

  • 2030 ஆம் ஆண்டிற்குள் பள்ளிக் கல்வியில் 100% மொத்தச் சேர்க்கை விகிதத்துடன் (GER - Gross Enrolment Ratio) பாலர் பள்ளியிலிருந்து உயர்நிலைக் கல்வி வரை அனைவருக்கும் கல்வியைக் கிடைக்கச் செய்தல்

  • 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வியை உறுதி செய்ய வேண்டும்.

  • 6 ஆம் வகுப்பிலிருந்து குறியாக்கல் மற்றும் தொழில்முறைக் கல்வியுடன் ஒரு புதிய பள்ளிப் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

  • தேசிய அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணறிவுத் திட்டமானது 2025 ஆம் ஆண்டிற்குள் 3 ஆம் வகுப்பு நிலையில் அடிப்படைத் திறன்கள் கற்பிப்பதை உறுதி செய்யும்.

  • ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் நடத்தப்படும் இறுதித் தேர்வுகளுக்கு மாற்றாக, பள்ளி மாணவர்கள் 3 தேர்வுகளை மட்டும் அதாவது 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் மட்டுமே தேர்வுகளை எழுதுவர்.

உயர்கல்வி

  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவற்றை இணைத்தல்.

  • பல்வேறு நுழைவு (சேர்க்கை) மற்றும் வெளியேறல் வாய்ப்புகளுடன் 4 ஆண்டுகால இளநிலைப் பட்டப்படிப்புகள் அறிமுகப் படுத்தப்படும்.

  • 2030 ஆம் ஆண்டில், கற்பித்தலுக்கான குறைந்தபட்ச பட்டப்படிப்புத் தகுதியானது 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த இளங்கலை கல்வியியல் படிப்பாக இருக்கும்.

  • ஆய்வியல் நிறைஞர் படிப்பானது நிறுத்தப்படும்.

  • இது தொழில்துறைக் கல்வி உள்ளிட்ட உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை இரட்டிப்பாக்குவதை, அதாவது 2018 ஆம் ஆண்டில் 26.3%லிருந்து 2035 ஆம் ஆண்டில் 50% ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • ஜேஇஇ முதன்மைத் தேர்வு மற்றும் நீட் ஆகியவற்றுடன் கூடுதலாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான மாணவர்களின் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வை நடத்தும் கூடுதல் பொறுப்பும் தேசியத் தேர்வு முகமையிடம் (NTA - National Testing Agency) வழங்கப் படும்.

  • உயர்கல்வியை ஒழுங்குபடுத்துவதற்காக இந்திய உயர் கல்வி ஆணையமானது அமைக்கப் படும்.

  • இது மருத்துவம் மற்றும் சட்டப் படிப்புகளைத் தவிர அனைத்து உயர் கல்விக்கான ஒற்றை ஒழுங்குமுறை அமைப்பாகும்.

C Raju August 11, 2024

It is very useful to my pgtrb. Preparation. Thk u so much

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்