அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் இந்தியாவின் தேசிய காற்றுத் தர வளக் கட்டமைப்பின் தேசியத் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
இது பெங்களூருவில் உள்ள தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தால் (NIAS) உருவாக்கப் பட்டுள்ளது.
இது தகவல் உருவாக்கம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் நாட்டில் மனித சுகாதாரத்தில் அவை ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்ய உதவும்.
தேசியக் காற்று தர வளக் கட்டமைப்பு ஆனது பின்வரும் ஐந்து தொகுதிகளைச் சார்ந்து உருவாக்கப்படும்.
கருத்துரு-1: உமிழ்வு இருப்பு, காற்றுப் பட்டறை மற்றும் தணிப்பு
கருத்துரு-2: மனித ஆரோக்கியம் மற்றும் வேளாண்மை மீதான தாக்கங்கள்
கருத்துரு-3: ஒருங்கிணைந்த கண்காணிப்பு, முன்னறிவிப்பு மற்றும் ஆலோசனைக் கட்டமைப்பு
கருத்துரு-4: எல்லைகள், சமூகப் பரிமாணம், பரிமாற்ற உத்தி மற்றும் கொள்கை