5வது தேசியக் குடும்பம் மற்றும் சுகாதாரக் கணக்கெடுப்பானது வெளியிடப் பட்டு உள்ளது.
இது நாட்டின் சமூகப் பொருளாதாரம் மற்றும் சுகாதாரக் குறிகாட்டிகள் மீதான மிக விரிவான ஒரு கணக்கெடுப்பாகும்.
முந்தையக் கணக்கெடுப்புகள் 1992-93, 1998-99, 2005-06 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்டன.
இந்தக் கணக்கெடுப்புகள் அனைத்தும் மும்பையில் உள்ள மக்கள்தொகை அறிவியலுக்கான சர்வதேசக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப் படுகின்றன
முக்கிய தகவல்கள்
2019-2021 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் இருந்தனர்.
1881 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முதலாவது நவீன ஒத்திசைவு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு தேசியக் குடும்பம் மற்றும் சுகாதாரக் கணக்கெடுப்புகளிலும் இதுவே மிக அதிகப் பாலின விகிதமாகும்.
மக்கள்தொகையானது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அதனை மாற்றிக் கொள்ளும் ஒரு நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கும் ஒரு வரம்பிற்கும் கீழாக மொத்தக் கருவுறுதல் வீதம் சரிந்துள்ளது.
2019-2021 ஆம் ஆண்டில் 2 ஆக இருந்த மொத்தக் கருவுறுதல் வீதமானது 2.1 என்ற அளவிலான மாற்றுக் கருவுறுதல் வீதத்தை விடச் சற்று குறைவாக இருந்தது.
குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவானது மேம்பட்டுள்ள அதே சமயத்தில் அது மெதுவான வேகத்திலேயே மேம்பட்டுள்ளது.
இந்தியா உணவுப் பாதுகாப்பு நிலையினை அடைந்திருந்தாலும், 60% இந்தியர்கள் ஊட்டச் சத்து மிக்க உணவுகளை வாங்க இயலாத நிலையிலேயே உள்ளனர்.