2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் வழக்குப் பதிவுகளின் எண்ணிக்கை 28% அதிகரித்து உள்ளது.
இது பிரதானமாக நாட்டில் கோவிட் – 19 விதி மீறல்கள் தொடர்பான வழக்குகளாகும்.
பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்கள் 9.4% அதிகரிப்பைக் கண்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளில் 8.30% குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் அதிக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் மாநிலங்கள் குஜராத் (97.1%), கேரளா (94.9%) மற்றும் தமிழ்நாடு (91.7%) ஆகியன ஆகும்.
2019 ஆம் ஆண்டில் 93 ஆக இருந்த தேசத் துரோக வழக்குகளின் எண்ணிக்கை, மணிப்பூர் (15 வழக்குகள்), அசாம் (12), கர்நாடகா (8), உத்தரப் பிரதேசம் (7), ஹரியானா (6), டெல்லி (5) மற்றும் காஷ்மீர் (2) என்ற எண்ணிக்கையில் 2020 ஆம் ஆண்டில் அது 73 ஆகக் குறைந்தது.