TNPSC Thervupettagam

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவு

February 12 , 2022 1534 days 713 0
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, தொற்றுநோய் ஏற்பட்ட முதல் ஆண்டான 2020 ஆம் ஆண்டில், சமீபத்தியக் காலங்களில் வேலையில்லாமல் இருந்தவர்கள் மத்தியில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகி உள்ளன.
  • முதன்முறையாக தற்கொலை எண்ணிக்கையானது 3,000 என்ற அளவைத் தாண்டி உள்ளது.
  • 3548 நபர்கள் தற்கொலையால் இறந்துள்ளனர்.
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில், கர்நாடகாவில் தான் வேலையில்லாதவர்களிடையே அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள்  பதிவாகியுள்ளன.
  • அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு (336), அசாம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • கடன் சுமை அல்லது திவால்தன்மை காரணமாக நிகழ்ந்த தற்கொலைகளில், மகாராஷ்டிரா 1341 உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு (524) ஆகியவை உள்ளன.
  • தமிழகத்தைத் தவிர, மற்ற மாநிலங்களில், விவசாயிகள் தான் அதிகளவில் தற்கொலை செய்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்