TNPSC Thervupettagam

தேசியக் கொடி தினம் 2026 - ஜூலை 22

July 24 , 2026 4 days 92 0
  • 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று அரசியல் நிர்ணய சபையால் மூவர்ணக் கொடி (இந்தியாவின் தேசியக் கொடி) ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் தேசியக் கொடி தினம் கடைபிடிக்கப்பட்டது.
  • தற்போதைய தேசியக் கொடியானது இந்திய காவி, வெள்ளை மற்றும் இந்தியப் பச்சை ஆகிய மூன்று கிடைமட்டப் பட்டைகளைக் கொண்டுள்ளதுடன் அதன் நடுவில் கருநீல நிறத்தில் 24 ஆரங்களைக் கொண்ட அசோகச் சக்கரம் உள்ளது.
  • 1947-ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியக் கொடியில் இருந்த ராட்டையை (நூற்கும் சக்கரம்) மாற்றி அசோகச் சக்கரம் இடம்பெற்றது.
  • இந்தியக் கொடிச் சட்டம் 2002 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. மேலும் தேசியக் கொடியின் காட்சி மற்றும் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக இது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.
  • தேசியக் கொடியானது இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்