TNPSC Thervupettagam

தேசியக் கௌரவ அவமதிப்புத் தடுப்பு (திருத்த) மசோதா, 2026

July 28 , 2026 2 days 39 0
  • தேசியக் கௌரவ அவமதிப்புத் தடுப்பு (திருத்த) மசோதா, 2026, மத்திய உள்துறை அமைச்சரால் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  • இந்த மசோதாவானது, தேசியப் பாடல் (வந்தே மாதரம்) என்பதை அதன் பாதுகாப்பின் கீழ் சேர்ப்பதன் மூலம், 1971 ஆம் ஆண்டின் தேசியக் கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முற்படுகிறது.
  • தேசியக் கொடி, அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதத்தைப் போன்று தேசியப் பாடலுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு ள்ளது.
  • தேசிய கீதம் அல்லது தேசியப் பாடலைப் பாடுவதை வேண்டுமென்றே தடுப்பவர்கள் அல்லது அத்தகைய கூட்டங்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கும் தண்டனையை இந்த மசோதா முன்மொழிகிறது.
  • வந்தே மாதரம் பாடலானது 1875 ஆம் ஆண்டில் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப் பட்டு, பின்னர் அவரது 'ஆனந்தமடம்' (1882) என்ற நாவலில் வெளியிடப்பட்டது.
  • ஜன கண மன பாடலுக்கு இணையான அந்தஸ்து வந்தே மாதரம் பாடலுக்கும் வழங்கப் பட வேண்டும் என்ற டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் அறிக்கையை (1950 ஆம் ஆண்டு ஜனவரி 24) இந்த மசோதா குறிப்பிடுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்