நிதி ஆயோக் அமைப்பானது, பொது மக்கள் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் தேசியத் தரவு மற்றும் பகுப்பாய்வு தளத்தினை (NDAP) தொடங்கியது.
தரவை எளிதில் அணுகக் கூடியதாகவும், இயங்கக்கூடியதாகவும், ஊடாடக் கூடியதாகவும், பயனர்களுக்கு ஏற்ற தளத்தில் எளிதாகக் கிடைக்கச் செய்வதன் மூலம், பொது அரசாங்கத் தரவுகளுக்கான அணுகலை மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அரசின் பல்வேறு துறைகளின் அடிப்படைத் தரவுத் தொகுப்புகளை உள்ளடக்கி, அவற்றை ஒழுங்குபடுத்தி அவற்றிற்கானப் பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தல் திறன்களை வழங்குகிறது.