மத்தியத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானாந்தா சோனோவால் தேசியத் தளவாடத் தளத்தினை (மரைன்) புது டெல்லியில் தொடங்கி வைத்தார்.
தேசியத் தளவாடங்கள் தளம் (NLP) என்பது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் ஆகும்.
அனைத்து தளவாடச் சமூகப் பங்குதாரர்களையும் இணைப்பதற்கும், செலவினங்கள் மற்றும் நேர தாமதங்களைக் குறைப்பதன் மூலம் செயல்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்கும், எளிதான, விரைவான மற்றும் அதிக போட்டித் திறன் கொண்ட சேவைகளை அடைவதற்கும் தகவல் தொழில்நுட்பத்தினைப் பயன் படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீர்வழிகள், சாலைகள் மற்றும் வான்வழிகள் வழியாக மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான போக்குவரத்து முறைகள் உட்பட, நாடு முழுவதும் உள்ள அனைத்து தளவாட வர்த்தகச் செயல்முறைகளுக்குமான ஒற்றைத் தொடர்பு மையமாக இது செயல்படும்.