மத்திய அமைச்சரவையானது மத்திய அரசில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஒரு பொது முதனிலைத் தேர்வை நடத்துவதற்காக தேசியத் தேர்வு முகமையை (NRA - National Recruitment Agency) அமைக்க முடிவு செய்துள்ளது.
NRA ஆனது அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகளில் உள்ள அரசிதழில் பதிவு செய்யப் படாத பணிகளுக்கு வேண்டிய பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு பொதுத் தகுதித் தேர்வை (CET - Common Eligibility Test) நடத்த உள்ளது.
இந்தத் தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அரசாங்கப் பதவிகளுக்கு வேண்டிய நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக வேண்டி பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளுக்குப் பதிலாக, ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டு ஒற்றை இணையதள அல்லது ஆன்லைன் தேர்வாக நடத்தப் படும்.
தற்பொழுதுள்ள தேர்வு முகமைகளான பணியாளர் தேர்வு ஆணையம் (SSC - Staff Selection Commission) இரயில்வே தேர்வு வாரியம் (RRB – Railway Recruitment Board), வங்கிப் பணியாளர் தேர்வு மையம் (IBPS - Institute of Banking Personnel Selection) ஆகியவை தொடர்ந்து செயல்படும்.
ஆரம்பத்தில் CET ஆனது SSC, RRB மற்றும் IBPS ஆகியவற்றின் தொகுதி பி மற்றும் தொகுதி சி (தொழில்நுட்பம் சாராதது) பதவிகளுக்கான தேர்வை மட்டுமே நடத்த உள்ளது.
CET ஆனது தேர்வர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு முதல் நிலைத் தேர்வாகும். இதன் மதிப்பெண் மூன்றாண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.
NRA என்பது சமூகப் பதிவுகள் சட்டம், 1860 என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும்.