புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது உதய்ப்பூரில் 2025 ஆம் ஆண்டு தேசியத் தொழில்துறை வகைப்பாட்டினை (NIC) வெளியிட்டது.
NIC 2025 என்பது இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகளை வகைப்படுத்தச் செய்வதற்கான சமீபத்திய தேசியத் தர நிலையாகும்.
1962 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியாவின் வகைப்பாட்டு முறையானது, NIC 1970, 1987, 1990, 1998, 2004 மற்றும் 2008 உட்பட பல முறை திருத்தப்பட்டுள்ளது.
NIC 2025 ஆனது கட்டமைப்பு, தொழில்நுட்ப மற்றும் நிறுவன மாற்றங்களை பிரதிபலிக்கிறது என்பதோடுமேலும் இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிதி தொழில் நுட்பம், இணைய வணிகம், ஆயுஷ் சுகாதாரம் மற்றும் கைத்தறி போன்ற துறைகளை உள்ளடக்கியது.
இது ஐ.நா. சபையின் 5வது சர்வதேசத் தரநிலை தொழில்துறை வகைப்பாடு (ISIC) திருத்தத்தினைப் பின்பற்றுகிறது.
NIC 2025 ஆனது, NIC 2008 முறையின் 5 இலக்கக் கட்டமைப்பை மாற்றும் 6 இலக்கக் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்துகிறது.
இதன் புதிய அம்சங்களில் இடைநிலை சேவைகள், சுற்றுச்சூழல் மற்றும் பசுமைப் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதார சேவைகளின் சிறந்த பிரதிநிதித்துவம் ஆகியவை அடங்கும்.
NIC 2025 ஆனது இந்தியா முழுவதும் புள்ளி விவர ஆய்வுகள், தேசியக் கணக்குகள், கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கு வழி காட்டும்.