ஜவுளி அமைச்சகமானது சிறப்பு வகை இழைகள், நிலையான ஜவுளி வகை, புவிசார் ஜவுளித் துறை, இயக்கவியல் தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த ஜவுளி ஆகிய துறைகளில் 23 உத்திசார் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளித்து உள்ளது.
இந்த உத்திசார் ஆராய்ச்சித் திட்டங்கள் முதன்மைத் திட்டமான ‘தேசியத் தொழில் நுட்ப ஜவுளித் துறை திட்டத்தின்' கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த 23 ஆராய்ச்சித் திட்டங்களில், வேளாண்மை, திறன்மிகு ஜவுளித் தொழில், சுகாதார நலன், உத்திசார் பயன்பாடு மற்றும் பாதுகாப்புக் கவச உடைகள் ஆகியவற்றில் பயன்பாட்டுக் கூறுகளைக் கொண்ட சிறப்பு வகை இழைகளுக்கான 12 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன.
வேளாண்மை மற்றும் சுகாதாரத் துறையில் பயன்பாட்டுக் கூறுகளைக் கொண்ட நிலையான ஜவுளிகளுக்கான 4 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும், புவிசார் ஜவுளித் தொழிலில் 5 திட்டங்களும், இயக்கவியல் ஜவுளித் தொழிலில் 1 திட்டமும், விளையாட்டுத் துறை சார்ந்த ஜவுளித் தொழிலில் 1 திட்டமும் இதன் மூலம் அனுமதிக்கப் பட்டுள்ளன.