தேசியப் பங்குச் சந்தை - உலகின் மிகப்பெரிய டெரிவேட்டிவ் பரிமாற்றம்
January 28 , 2022 1287 days 590 0
2021 ஆம் ஆண்டில் வர்த்தகம் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையானது உலகின் மிகப்பெரிய டெரிவேடிவ் பரிமாற்றமாக உருவெடுத்துள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான உலகப் பரிவர்த்தனைக் கூட்டமைப்பு மேற்கொண்ட புள்ளி விவரங்களின் படி, வர்த்தகங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், பணப் பங்குகளில் தேசியப் பங்குச் சந்தை ஆனது உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.