ஒடிசா மாநில முதல்வரான நவீன் பட்நாயக் 2019 ஆம் ஆண்டின் தேசியப் பழங்குடியின கைவினைக் கண்காட்சியினை புவனேஸ்வரில் திறந்து வைத்தார்.
இந்த கைவினைக் கண்காட்சியானது பாரம்பரியப் பழங்குடியினக் கலைகள் மற்றும் கைவினைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் பிரபலப் படுத்துதல் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இதில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள்: இரும்பு, மூங்கில் பொருட்கள், பொம்மலாட்டங்கள், சியாலி கைவினைப் பொருட்கள், பழங்குடி ஜவுளிகள் மற்றும் பூத்தையல் வேலைப்பாடு கொண்ட பொருள்கள் போன்றவையாகும்.