தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் சேர்க்கையை ஒத்தி வைக்க கோரிய மத்திய அரசின் மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்
September 25 , 2021 1453 days 525 0
தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் சேர்க்கையை 2022 ஆம் ஆண்டு மே மாதம் வரை ஒத்தி வைக்க கோரி மத்திய அரசு முன்வைத்த கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தேசியப் பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமிகளில் பெண்கள் பங்கேற்பதற்கும் தேசியப் பாதுகாப்பு அகாடமியில் அவர்கள் பயிற்சி பெறுவதற்கும் அனுமதி வழங்கிய ஆகஸ்ட் 18 நாளது இடைக்கால ஆணையை மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
மத்திய அரசின் கருத்து
அகாடமியில் பெண் வீரர்கள் அனுமதிக்கப்படும் முன்பு அவர்களுக்கென பல வசதிகளை உருவாக்க வேண்டியிருப்பதால், 2021 ஆம் ஆண்டில் தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் சேர்க்கை சாத்தியமில்லை என உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கூறியிருந்தது.